I-STEM (இந்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் முனையங்கள் செயல் திட்டங்கள்) ‘சமவேஷா’ என்ற ஒரு மாபெரும் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
முனையங்கள் மற்றும் ஆய்வகங்களுக்கான அணுகலை மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவில் ஆராய்ச்சி சார்ந்த ஒத்துழைப்பில் புரட்சிகர மாற்றத்தினை ஏற்படுத்தச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாடு முழுவதும் வளங்களின் உகந்த முறையில் பயன்படுத்தச் செய்வதன் நோக்கில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
மேம்பட்ட அறிவியல் உபகரணங்களைப் பெற விரும்பும் ஆராய்ச்சியாளர் அல்லது தொழில் நிறுவனங்கள் தாங்கள் தேடும் உபகரணங்களை வைத்திருக்கும் அந்த நிறுவனத்துடன் இணைந்து, I-STEM தளம் மூலம் தங்களது சோதனைகளை நடத்துவதற்கு அவற்றை வாடகைக்குப் பெறலாம்.