சமஸ்கிருதம் மற்றும் இந்தி ஆகியவற்றை 3வது மொழிகளாகக் கற்பித்தல்
April 7 , 2025 12 days 91 0
கடைசியாகக் கிடைத்த கணக்கெடுப்பின் படி, ஆரம்பக் கல்வி நிலையில் பீகாரில், 99.1% பள்ளிகள் இந்தி மொழியையும், 64% பள்ளிகள் ஆங்கிலத்தையும், 56% பள்ளிகள் சமஸ்கிருதத்தையும் கற்பித்தன என்ற நிலையில் சுமார் 8% பள்ளிகள் மட்டுமே பிற மொழிகளைக் கற்பித்தன.
இதே போல், உத்தரப் பிரதேசத்தில், ஆரம்பக் கல்வி நிலையில் 94% பள்ளிகள் இந்தி மொழியையும், சுமார் 75.3% பள்ளிகள் ஆங்கிலத்தையும், சுமார் 65.2% பள்ளிகள் சமஸ்கிருதத்தையும் கற்பித்தன என்ற நிலையில் சுமார் 7% பள்ளிகள் மட்டுமே பிற மொழிகளைக் கற்பித்தன.
உத்தரகாண்ட் மாநிலத்தில், இந்த எண்ணிக்கை 99.5% இந்தி மொழி, 85.5% ஆங்கிலம், 79.4% சமஸ்கிருதம் மற்றும் 2.6% பிற மொழிகள் ஆக உள்ளன.
குஜராத் மாநிலத்தில், ஆரம்பக் கல்வி நிலையில் 97% பள்ளிகளுக்கு மேல் குஜராத்தி மொழியையும் 20.9% பள்ளிகள் ஆங்கில மொழியையும் கற்பித்தன என்ற நிலையில் சுமார் 64% பள்ளிகள் இந்தி மொழியைக் கற்பித்தன என்பதோடு சுமார் 2.2% பள்ளிகள் மட்டுமே பிற மொழிகளைக் கற்பித்தன.
கர்நாடகாவில், சுமார் 97.5% பள்ளிகள் கன்னட மொழியையும், 86.2% பள்ளிகள் ஆங்கில மொழியையும், சுமார் 30.4% பள்ளிகள் இந்தி மொழியையும், சுமார் 15% பள்ளிகள் மட்டுமே பிற மொழிகளையும் கற்பிக்கின்றன.
பஞ்சாப் மாநிலத்தில், சுமார் 79.2% பள்ளிகள் இந்தி மொழியையும், 1 சதவீதத்திற்கும் குறைவான பள்ளிகள் ஆங்கிலம் மற்றும் பஞ்சாபி மொழி தவிர பிற மொழிகளைக் கற்பிக்கின்றன.
இந்தப் போக்கின் படி, இந்தி மொழி பேசாத மாநிலங்களில், மூன்றாம் மொழி என்பது முன்னுரிமை பெரும்பாலும் இந்தி மொழிக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.