TNPSC Thervupettagam

சமீப் – இந்திய வெளியுறவுக் கொள்கைகள்

December 24 , 2017 2573 days 887 0
  • மாணவர்கள் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்குமான கூட்டிணைவுத் திட்டம் எனும் ஆங்கிலப் பொருள்படும் சுருக்க தமிழ்  வார்த்தையே சமீப் (SAMEEP – Students And Ministry of External Affairs Programme] எனப்படும்.
  • இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளையும், அதன் உலகளாவிய வெளியுறவு ஈடுபாட்டையும் நாடு முழுவதுமுள்ள மாணவர்களிடத்தினில் கொண்டு செல்வதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
  • இந்தியாவின் உலகளாவிய குறிக்கோள்களையும், அது உலக மன்றத்தில் கொண்டிருக்கும் நிலைத்தன்மை பற்றி மாணவர்களுக்கு ஆர்வமூட்டவும், அதனைப் பற்றி அறிந்தவர்களாய் அவர்களை உருவாக்கவும், தன்னுடைய வாழ்க்கை விருப்பத்தேர்வாய் இராஜ்ஜிய ரீதியான பணிகளில் மாணவர்கள்  ஆர்வத்தை செலுத்திடுவதற்காகவும் இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் அனைத்து அமைச்சகங்களின் கீழ் பணிபுரியும் கீழ்நிலை செயலாளர்களும் (Under Secreteries) தங்களுடைய சொந்த ஊர்களுக்கும், தாங்கள் பயின்ற கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றிற்கும் சென்று அங்குள்ள மாணவர்களுடன் மத்திய வெளியுறவுத் துறை செயல்படும் விதம், அதனுடைய கொள்கைகளின் அடிப்படைக் கூறுகள், அங்கு எப்படி இராஜ்ஜிய ரீதியிலான விஷயங்கள் மேற்கொள்ளப்படுகிறது போன்றவை விவாதிப்பர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்