வேளாண்மை தொடர்பான நவீன கண்டுபிடிப்புகளைப் பற்றி விவசாயிகளுக்குத் தெரிவிப்பதற்காக விவசாயிகளுக்கான சமுதாய வானொலி (community radio) ஒன்றை கேரள மாநில அரசு துவங்க உள்ளது.
நாட்டில் மாநில அரசினுடைய தொடக்கத்தின் கீழ் விவசாய சமுதாயத்தோடு இணைந்திடக் கூடிய முதல் சமுதாய வானொலி இதுவேயாகும்.
கேரள மாநிலத்தின் மாநில வேளாண் துறையின் வேளாண் தகவல் பணியகத்தின் (Farm Information Bureau - FIB) கீழ் இந்த சமுதாய வானொலி தொடங்கப்பட உள்ளது.
கேரள மாநிலத்தின் முதல் வேளாண் வானொலியானது ஒரு காலத்தில் “கேரளாவின் அரிசிக் கிண்ணம்” (Rice bowl of Kerala) என்றழைக்கப்பட்ட ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடிலிருந்து தன் முதல் ஒலிபரப்பை தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
கடல் நீர்மட்டத்திற்குக் கீழான பகுதிகளில் வேளாண்மை செய்யப்படும் உலகின் ஒரு சில இடங்களில் குட்டநாடு (Kuttanad) பகுதியும் ஒன்றாகும். தன்னுடைய பெரும்பரப்பிலான நெல் சாகுபடியினால் குட்டநாடு புகழ் பெற்று விளங்குகின்றது.