TNPSC Thervupettagam

சமுதாய வானொலி

April 20 , 2018 2443 days 914 0
  • வேளாண்மை தொடர்பான நவீன கண்டுபிடிப்புகளைப் பற்றி விவசாயிகளுக்குத் தெரிவிப்பதற்காக விவசாயிகளுக்கான சமுதாய வானொலி (community radio) ஒன்றை கேரள மாநில அரசு துவங்க உள்ளது.
  • நாட்டில் மாநில அரசினுடைய தொடக்கத்தின் கீழ் விவசாய சமுதாயத்தோடு இணைந்திடக் கூடிய முதல் சமுதாய வானொலி இதுவேயாகும்.
  • கேரள மாநிலத்தின் மாநில வேளாண் துறையின் வேளாண் தகவல் பணியகத்தின் (Farm Information Bureau - FIB) கீழ் இந்த சமுதாய வானொலி தொடங்கப்பட உள்ளது.
  • கேரள மாநிலத்தின் முதல் வேளாண் வானொலியானது ஒரு காலத்தில் “கேரளாவின் அரிசிக் கிண்ணம்” (Rice bowl of Kerala) என்றழைக்கப்பட்ட ஆலப்புழா  மாவட்டத்தில் உள்ள குட்டநாடிலிருந்து தன் முதல் ஒலிபரப்பை தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
  • கடல் நீர்மட்டத்திற்குக் கீழான பகுதிகளில் வேளாண்மை செய்யப்படும் உலகின் ஒரு சில இடங்களில் குட்டநாடு (Kuttanad) பகுதியும் ஒன்றாகும். தன்னுடைய பெரும்பரப்பிலான  நெல் சாகுபடியினால் குட்டநாடு புகழ் பெற்று விளங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்