TNPSC Thervupettagam

சமுத்திரயான் திட்டம்

September 17 , 2023 309 days 232 0
  • சமுத்திரயான் என்ற திட்டமானது 2026 ஆம் ஆண்டிற்குள் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • இது சென்னையில் உள்ள தேசியக் கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தினால் (NIOT) வடிவமைத்து உருவாக்கப்படுகிறது.
  • இந்த நீர்மூழ்கி வாகனத்திற்கு 'மத்ஸ்யா 6000' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • இது சாதாரணச் செயல்பாட்டின் போது 12 மணிநேரமும், மனிதப் பாதுகாப்புக்காக அவசரகாலச் செயல்பாடுகளின் போது 96 மணிநேரமும் இயங்கும் திறன் கொண்டது.
  • இந்த நீர்மூழ்கி வாகனம் ஆனது மூன்று பணியாளர்களை 6000 மீட்டர் ஆழத்திற்கு அனுப்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • மனிதர்களை ஆழ்கடல் பகுதிக்கு அனுப்பும் இந்தியாவின் இந்த முதல் திட்டமானது, ஆழ்கடல் வளங்களைப் பற்றி ஆய்வு செய்வதற்காகவும், பல்லுயிர் சார்ந்த பல்வேறு மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டம் ஆனது, மத்திய அரசின் நீல (கடல்சார்) பொருளாதாரக் கொள்கையை ஆதரிக்கும் வகையிலான மாபெரும் ஆழ்கடல் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்