தொகுக்கப்பட்ட சொத்துக்களின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி மின்னஞ்சல் (E-mail), கட்செவி அஞ்சல் (Whats App) போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இந்தியாவிலிருக்கும் பயனாளர்களுக்கு பணம் அனுப்ப வெளிநாடுவாழ் இந்தியர்களை இயலச் செய்கிறது.
சமூக ஊடக பணம் செலுத்து அமைப்பு எனப் பெயரிடப்பட்டுள்ள இது, இந்தியாவிலுள்ள எந்தவொரு வங்கியாலும் எடுக்கப்படாத முதல் முயற்சியாகும். பணம் அனுப்பப் பயன்படும் இவ்வங்கியின் செயலியான Money 2 India வில் இவ்வசதி உள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆனது, எல்லை தாண்டிய சமூக ஊடகங்கள் வழியான பணம் அனுப்பும் வசதியை அனுமதிக்கும் சேவையைத் தொடங்கிய இந்தியாவின் முதல் வங்கியாகவும் உலகளவில் இச்சேவையை ஆரம்பித்த ஒரு சில நாடுகளின் வங்கிகளுள் ஒன்றாகவும் இருக்கிறது.