சமூக ஊடகம் மூலமாக இளைஞர்களோடு தொடர்பு கொள்ள மகாராஷ்டிரா அரசாங்கம் ‘சமூக ஊடகம் - மஹாமித்ரா‘ எனும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இளைஞர்கள் தங்கள் வெற்றிக் கதைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவும், சமூகத்தின் நல்லெண்ணத்திற்காக பாடுபடுபவர்களை சமூக ஊடகத் தலைவர்களாக அங்கீகரிக்கவும் அரசாங்கம் எண்ணுகிறது.
இந்த திட்டத்தில் பங்கெடுக்க விருப்பமுள்ளளவர்கள் இதில் பதிவு செய்யும் வண்ணம் அரசு ஒரு கைபேசி செயலியை வெளியிட்டுள்ளது.
இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் ஆனது இளைஞர்கள் ஒரு வலுவான மற்றும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கிட எவ்வாறு சமூக ஊடகத்தை பயன்படுத்திட வேண்டும் என்பதை உணர வேண்டும் என்பதாகும்.