TNPSC Thervupettagam

சமூக நிறுவன மேம்பாட்டுத் திட்டம்

June 22 , 2018 2252 days 645 0
  • திம்புவைச் சார்ந்த சார்க் (SAARC) மேம்பாட்டு நிதி, இந்தியா உட்பட 8 உறுப்பினர்களின் 80 நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதற்காக சமூக நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தினைத் தொடங்க உள்ளது.
  • இந்த திட்டம் அனைத்து சார்க் உறுப்பினர் நாடுகளிலும் அமலாக்கப்பட்டுள்ளது. நன்கொடைகள் மற்றும் திரும்ப செலுத்தக் கூடிய முதலீடுகளினை பயன்படுத்தி சமூக நிறுவனங்களை அடையாளம் காண்பது மற்றும் கட்டமைப்பது இதன் நோக்கங்களாகும்.
  • சமூக மேம்பாட்டு நிதி, சார்க் (SARRC)-ன் அனைத்து 8 உறுப்பினர் நாடுகளின் தலைவர்களால் 2010-ல் பூடானின் திம்பு நகரத்தில் நடந்த 16-வது சார்க் உச்சி மாநாட்டில் நிறுவப்பட்டது.
  • ஆளும் பொது சபை இந்த எட்டு நாடுகளின் நிதி அமைச்சர்களை உள்ளடக்கியது. சமூக மேம்பாட்டு நிதியின் செயலகம் பூடானின் தலைநகரான திம்புவில் உள்ளது.
  • இது தெற்காசிய மேம்பாட்டு வளர்ச்சி நிதியின் வழித்தோன்றலாகும். தெற்காசிய மேம்பாட்டு வங்கி, 1996-ல் நடப்பில் இருந்த இரண்டு முறைகளை இணைத்து உருவாக்கப்பட்டது. அவையாவன,
    • சார்க்-ன் பிராந்தியத் திட்டங்களுக்கான நிதி (SFRP) மற்றும்
    • சார்க் பிராந்திய நிதி
  • சார்க்-ன் முன்னேற்ற வளர்ச்சித் திட்டங்களுக்கான குடை போன்ற அமைப்பாக சமூக மேம்பாட்டு நிதி உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்