முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஏழு உறுப்பினர்கள் அடங்கிய சமூக நீதி கண்காணிப்புக் குழுவினை நிறுவுவதாக அறிவித்தார்.
திராவிட சித்தாந்தவாதி சுப. வீரபாண்டியன் இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்குவார்.
தமிழ்நாடு முழுவதும் கல்வி, வேலைவாய்ப்பு, பணி அமர்வு, பதவி உயர்வு மற்றும் நியமனம் ஆகியவற்றில் சமூக நீதியானது சரியான முறையில் அமல்படுத்தப் படுகிறதா என இந்தக் குழு கண்காணிக்கும்.
மேலும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவ்வப்போது மாநில அரசிற்குப் பரிந்துரைகளையும் இந்தக் குழு வழங்கும்.
இக்குழுவின் மற்ற உறுப்பினர்கள்
ஓய்வு பெற்ற இந்திய குடிமைப்பணி அதிகாரி K. தனவேல்
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் முன்னாள் துணை ஆளுநர் சுவாமிநாதன் தேவதாஸ்
தமிழ்க் கவிஞர் மனுஷ்யபுத்திரன்
ஆதிதிராவிடர் மற்றும் பட்டியலிடப்பட்ட சாதியினர் தொடர்பான சட்டங்களின் நிபுணர் A. ஜெய்சன்
R. ராஜேந்திரன் – பொருளாதார நிபுணர்
G. கருணாநிதி – அனைத்திந்திய இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஊழியர் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர்.