TNPSC Thervupettagam
May 12 , 2019 1898 days 610 0
  • இந்திய உச்ச நீதிமன்றம் பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினத்தைச் (SC/ST) சேர்ந்த பணியாளர்களுக்கு மூப்பு மற்றும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்யும் கர்நாடக அரசின் 2018 ஆம் ஆண்டுச் சட்டத்தை உறுதி செய்தது.
  • அரசியலமைப்பு அமர்வானது இடஒதுக்கீடு அளிக்கும்போது பின்வரும் விதிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
    • நிர்வாகத் திறன் பாதிக்கப்படக் கூடாது.
    • தகுதி அடிப்படையில் அல்லாமல் மற்றவற்றின் அடிப்படையில் நியமிக்காதிருத்தல்.
  • குறிப்பிட்ட அளவிடத்தக்க தகவல்களுடன் SC/ST பணியாளர்களின் பின்தங்கிய நிலை மற்றும் பிரதிநிதித்துவப் பற்றாக்குறை என்ற ஒன்றை உருவாக்கிய இந்தியாவின் முதலாவது மாநிலமாக கர்நாடகா உருவெடுத்துள்ளது.
  • இது 2017 ஆம் ஆண்டில் தலைமைச் செயலாளரின் கீழ் ஒரு குழுவை அமைத்தது. இக்குழு பணியில் உள்ள SC/ST பணியாளர்களின் தரவுகளைச் சேகரித்து அதனைப் பகுப்பாய்வு செய்தது.
  • கடந்த 32 ஆண்டுகளில் கர்நாடக மாநில குடிமைப் பணிகளில் 10.65 சதவிகிதம் SC பிரிவினரும் 2.92 சதவிகிதம் ST பிரிவினரும் பணியில் சேர்ந்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்