TNPSC Thervupettagam

சமூக முன்னேற்றக் குறியீடு 2022

December 26 , 2022 698 days 424 0
  • இந்திய மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கான சமூக முன்னேற்றக் குறியீடானது பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவினால் வெளியிடப்பட்டது.
  • இந்தப் பட்டியலில் அதிக மதிப்பெண் பெற்று புதுச்சேரி (65.99) முதலிடம் பிடித்தது.
  • அசாம், ஜார்க்கண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் இந்தியாவில் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளன.
  • கோவா, புதுச்சேரி, இலட்சத்தீவு மற்றும் சண்டிகர் ஆகியவை அடிப்படை மனிதத் தேவைகளில் முன்னணியில் உள்ள நான்கு மாநிலங்கள் ஆகும்.
  • மிசோரம், இமாச்சலப் பிரதேசம், லடாக் மற்றும் கோவா ஆகியவை நல்வாழ்வுக்கான அடித்தள உருவாக்கத்தில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களாக உருவெடுத்து உள்ளன.
  • மிசோரம், நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகியவை சுற்றுச்சூழல் தரத்தில் முன்னணியில் உள்ள முதல் மூன்று மாநிலங்களாகும்.
  • தமிழ்நாடு மாநிலமானது வாய்ப்பு என்ற கூறில் அதிகபட்ச மதிப்பெண்ணைப் பெற்று உள்ளது.
  • ஐஸ்வால் (மிசோரம்), சோலன் (இமாச்சலப் பிரதேசம்) மற்றும் சிம்லா (இமாச்சலப் பிரதேசம்) ஆகியவை சிறந்த செயல்திறன் கொண்ட முதல் மூன்று மாவட்டங்களாக உருவெடுத்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்