TNPSC Thervupettagam

சமூக முன்னேற்றக் குறியீடு

December 23 , 2022 701 days 817 0
  • பிரதமர் அவர்களுக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவானது (EAC-PM) இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கான சமூக முன்னேற்றக் குறியீட்டினை (SPI) வெளியிட்டுள்ளது.
  • இது தேசிய மற்றும் துணை தேசிய அளவில் நமது நாடு அடைந்துள்ள சமூக முன்னேற்றத்தின் முழுமையான மதிப்பீடாக விளங்குகின்ற ஒரு விரிவான செயற் கருவியாகும்.
  • இது போட்டித் திறன் மற்றும் சமூக முன்னேற்ற நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டது.
  • நாட்டிலுள்ள 112 உயர் இலட்சியமிக்க மாவட்டங்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தினை இந்த அறிக்கையின் சிறப்புப் பகுதி எடுத்துக் காட்டுகிறது.
  • சமூக முன்னேற்றத்தின் 3 முக்கியமான பரிமாணங்களில் உள்ள 12 கூறுகளின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை இந்தக் குறியீடு மதிப்பிடுகிறது.

3 பரிமாணங்கள்

  • மனிதனின் அடிப்படைத் தேவைகள் - ஊட்டச்சத்து மற்றும் அடிப்படை மருத்துவ வசதி, நீர் மற்றும் துப்புரவு, தனிப்பட்டப் பாதுகாப்பு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றின் அடிப்படையில் செயல்திறனை மதிப்பிடுகிறது.
  • நல்வாழ்வின் அடித்தளங்கள் - அடிப்படை அறிவுக்கான அணுகல், தகவல் மற்றும் தொடர்புக்கான அணுகல், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் தரம் ஆகியவற்றின் கூறுகள் முழுவதும் மேற்கொள்ளப் பட்டுள்ள முன்னேற்றத்தை இந்த அறிக்கை மதிப்பிடுகிறது.
  • வாய்ப்பு - தனிப்பட்ட உரிமைகள், தனிப்பட்டச் சுதந்திரம் மற்றும் தெரிவுகள், உள்ளார்ந்தத் தன்மை மற்றும் மேம்பட்ட கல்விக்கான அணுகல் ஆகிய கூறுகளை மதிப்பிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்