பிரதமர் அவர்களுக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவானது (EAC-PM) இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கான சமூக முன்னேற்றக் குறியீட்டினை (SPI) வெளியிட்டுள்ளது.
இது தேசிய மற்றும் துணை தேசிய அளவில் நமது நாடு அடைந்துள்ள சமூக முன்னேற்றத்தின் முழுமையான மதிப்பீடாக விளங்குகின்ற ஒரு விரிவான செயற் கருவியாகும்.
இது போட்டித் திறன் மற்றும் சமூக முன்னேற்ற நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டது.
நாட்டிலுள்ள 112 உயர் இலட்சியமிக்க மாவட்டங்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தினை இந்த அறிக்கையின் சிறப்புப் பகுதி எடுத்துக் காட்டுகிறது.
சமூக முன்னேற்றத்தின் 3 முக்கியமான பரிமாணங்களில் உள்ள 12 கூறுகளின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை இந்தக் குறியீடு மதிப்பிடுகிறது.
3 பரிமாணங்கள்
மனிதனின் அடிப்படைத் தேவைகள் - ஊட்டச்சத்து மற்றும் அடிப்படை மருத்துவ வசதி, நீர் மற்றும் துப்புரவு, தனிப்பட்டப் பாதுகாப்பு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றின் அடிப்படையில் செயல்திறனை மதிப்பிடுகிறது.
நல்வாழ்வின் அடித்தளங்கள் - அடிப்படை அறிவுக்கான அணுகல், தகவல் மற்றும் தொடர்புக்கான அணுகல், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் தரம் ஆகியவற்றின் கூறுகள் முழுவதும் மேற்கொள்ளப் பட்டுள்ள முன்னேற்றத்தை இந்த அறிக்கை மதிப்பிடுகிறது.
வாய்ப்பு - தனிப்பட்ட உரிமைகள், தனிப்பட்டச் சுதந்திரம் மற்றும் தெரிவுகள், உள்ளார்ந்தத் தன்மை மற்றும் மேம்பட்ட கல்விக்கான அணுகல் ஆகிய கூறுகளை மதிப்பிடுகிறது.