சமூகப் பங்கு பரிவர்த்தனை (SSE - Securities Stock Exchange) குறித்து ஆராய இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தினால் (SEBI - Securities and Exchange Board of India) ஏற்படுத்தப்பட்ட ஒரு பணிக் குழுவானது தனது பரிந்துரைகளைச் சமர்ப்பித்து உள்ளது.
இந்தக் குழுவானது 2019 ஆம் ஆண்டில் SEBI அமைப்பால் இஸ்காத் ஹுசைன் என்பவரது தலைமையில் அமைக்கப்பட்டது.
இது இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒரு புதியக் கருத்தாக்கமாகும்.
இது தனியார் மற்றும் லாப நோக்கற்ற துறையில் உள்ளவர்களுக்கு அதிக முதலீடுகளை ஏற்படுத்தித் தருவதைக் குறிக்கின்றது.
இதன் மூலம், சமூக நல அமைப்புகள் மற்றும் லாப நோக்கற்ற நிறுவனங்கள் ஒரு வெளிப்படையான மின்னணுத் தளத்தில் சமூக முதலீட்டை வெகு விரைவாக திரட்ட இயலும்.