TNPSC Thervupettagam

சமூகப் பாதுகாப்புத் திட்டப் பரவலெல்லை

April 2 , 2025 8 hrs 0 min 33 0
  • சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ILO) ஆனது, சமீபத்தில் தனது சமீபத்திய உலக சமூகப் பாதுகாப்பு அறிக்கையை (WSPR) வெளியிட்டுள்ளது.
  • இந்தியா தனது சமூகப் பாதுகாப்புப் பரவலை விரிவுபடுத்துவதில் சில குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது என்பதோடு 2021 ஆம் ஆண்டில் 24.4% ஆக இருந்த இது 2024 ஆம் ஆண்டில் 48.8% ஆக இரட்டிப்பாகியுள்ளது.
  • சுமார் 920 மில்லியன் மக்கள், அல்லது மக்கள் தொகையில் சுமார் 65% பேர், தற்போது மிகக் குறைந்த பட்சம் ஒரு வகையான சமூகப் பாதுகாப்பு வசதியின் கீழ் நன்கு பயன் பெறுகின்றனர்.
  • அமைப்புசாரா தொழிலாளர்களைப் பதிவு செய்வதற்காக வேண்டி 2021 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த eShram இணைய தளத்தில், மொத்த எண்ணிக்கையில் 53.68% பெண்களின் பங்குடன் 30.68 கோடி பதிவுகள் பதிவாகியுள்ளது.
  • 7.25 கோடி மக்கள் பதிவு செய்துள்ள அடல் ஓய்வூதியத் திட்டம் ஆனது, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மொத்தமாக 43,369.98 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்