சமையல் எண்ணெய் குறித்த நிதி ஆயோக் அமைப்பின் அறிக்கை
September 5 , 2024 82 days 108 0
நிதி ஆயோக் அமைப்பானது, 'ஆத்மநிர்பாரதா’ (தன்னிறைவு மிக்க இந்தியா) என்ற இலக்கை நோக்கி சமையல் எண்ணெய் உற்பத்தி வளர்ச்சியை துரிதப்படுத்தச் செய்வதற்கான செயல்பாடுகள் மற்றும் உத்திகள்' என்ற தலைப்பில் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
10 மாநிலங்களில் உள்ள மொத்த நெல் உற்பத்தி மேற்கொள்ளப்படும் தரிசு நிலத்தில் மூன்றில் ஒரு பகுதியை எண்ணெய் வித்துச் சாகுபடிக்குப் பயன்படுத்துவதன் மூலம் சமையல் எண்ணெய்களின் உற்பத்தியை 1.03 மில்லியன் டன்கள் (MT) அதிகரிக்கலாம் மற்றும் இந்தியா இறக்குமதியினைச் சார்ந்திருக்கும் நிலையினை சுமார் 7.1% வரை குறைக்கலாம்.
எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் 3.12 மெட்ரிக் டன்கள் வரை அதிகரிக்கலாம் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
சமையல் எண்ணெய்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க வேண்டி பாமாயில் (செம்பனை எண்ணெய்) எடுப்பதற்காக நாட்டில் செம்பனை சாகுபடியை அதிகரிக்கவும் இந்த அறிக்கை இந்தப் பரிந்துரை செய்துள்ளது.
மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் ஆளி விதை, எள் மற்றும் கடுகு பயிரிடுவதன் மூலம் சமையல் எண்ணெய் உற்பத்தியை 0.85 மெட்ரிக் டன்னாக அதிகரிக்க முடியும்.
இதே போல், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஆகியவை ஆளி விதை, சூரியகாந்தி, குசம்பப்பூ மற்றும் கடுகு ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் 0.62 மெட்ரிக் டன் சமையல் எண்ணெய் உற்பத்தியினை எட்டும் திறனைக் கொண்டுள்ளன.
நாட்டில் தனிநபர் சமையல் எண்ணெய் நுகர்வு ஆண்டுக்கு 19.7 கிலோவை எட்டி உள்ளது.
2022-23 ஆம் ஆண்டில், இந்தியா சுமார் 16.5 மெட்ரிக் டன் என்ற அளவில் சமையல் எண்ணெய்யை இறக்குமதி செய்தது என்ற நிலையில் உள்நாட்டு உற்பத்தியானது நாட்டின் தேவைகளில் 40-45% அளவினை மட்டுமே பூர்த்தி செய்துள்ளது.