பிரதான் மந்திரி போஷன் சக்தி நிர்மாண் (PM-POSHAN) திட்டத்தின் கீழ், அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளிலும் மேற்கொள்ளப் படுகின்ற மதிய உணவுத் திட்டத்தில் சமையல் எண்ணெயின் பயன்பாட்டை 10% குறைக்குமாறு மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மிகவும் புதுமையான வழிகள் மூலம் அன்றாட வாழ்க்கையில் சமையல் எண்ணெயின் பயன்பாட்டை 10% குறைப்பது குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் 5 முதல் 19 வயதிற்குட்பட்ட 12.5 மில்லியன் குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருந்தனர் என்பதோடு இது 1990 ஆம் ஆண்டில் சுமார் 0.4 மில்லியன் ஆக இருந்தது.
ஆக நகர்ப்புறங்களில் இந்த எண்ணிக்கையானது பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளில் அதிகமாக இருந்தது.
PM-POSHAN என்பது மாணவர்களுக்கு சத்தான உணவை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டமாகும்.
இந்த முன்னெடுப்பானது, மழலையர் பள்ளிகள் மற்றும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை சேரும் அனைத்து குழந்தைகளுக்கும் பயன் அளிக்கிறது.