TNPSC Thervupettagam

சமையல் எண்ணெய்க்கான தேசிய திட்டம்

February 1 , 2021 1267 days 668 0
  • வேளாண் அமைச்சகம் இந்தத் திட்டத்தை முன்மொழிந்துள்ளது.
  • இது உள்நாட்டில் கிடைக்கும் தன்மையை அதிகரிப்பதையும் மற்றும் இறக்குமதி சார்புநிலையைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2020-21 முதல் 2024-25 வரையிலான காலப்பகுதியில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தத் திட்டம் முன்மொழியப் பட்டுள்ளது.
  • இது மூன்று துணைத் திட்டங்களைக் கொண்டுள்ளது.
  • இவை மூன்று மூலங்களிலிருந்து எண்ணெய் வித்துக்கள் மற்றும் சமையல் எண்ணெய்களின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் உள்ளன.
    • முதன்மை ஆதாரங்கள் - இதில் வருடாந்திரப் பயிர்கள், பெருந்தோட்டப் பயிர்கள் மற்றும் மரத்திலிருந்துப் பெறப்படுகின்ற உணவிற்குப் பயன்படும் எண்ணெய் வித்துக்கள் ஆகியன இதில் அடங்கும்.
    • இரண்டாம் நிலை ஆதாரங்கள் - இதில் அரிசியின் உமி எண்ணெய் மற்றும் பருத்தி விதை எண்ணெய் ஆகியவை அடங்கும்.
    • ஒரு நபர் ஆண்டுக்கு 19.00 கிலோ என்ற அளவில் சமையல் எண்ணெய் நுகர்வை நிலையாக பராமரிப்பதற்கான நுகர்வோர் விழிப்புணர்வு.
  • இந்தியாவில், 25 மில்லியன் டன் சமையல் எண்ணெய்கள் தேவைப்படுகின்றன.
  • இதில் 60% தேவை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்