சம் சால்மன் (கிழாங்கு மீன்) எனப்படும் அனாட்ரோமஸ் சால்மோனிட் மீன் இனம் ஆனது, ஆர்க்டிக் பகுதியை முட்டையிடுவதற்கான ஒரு புதிய இடமாகக் கண்டறிந்து உள்ளது.
சம் சால்மன் என்பது அனாட்ரோமஸ் இனமாகக் கூறப்படுகிற நிலையில், அதாவது முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பதற்காக நன்னீர் நீரோடைகள் மற்றும் ஆற்றுப் பகுதிகளுக்கு இடம் பெயரும் இனமாகும்.
பின்னர் அவை உணவிற்காகவும் வளர்வதற்காகவும் உப்பு நீர் கொண்ட கடல் சூழலுக்கு இடம் பெயர்கின்றன.
அவை நீண்ட காலம் நன்னீரில் தங்குவதில்லை.
பருவநிலை மாற்றத்தினால், இவை அதிக எண்ணிக்கையில் இனப்பெருக்கம் செய்வதற்கு ஆர்க்டிக் பகுதிகள் ஏற்றதாக மாறி வருகின்றன.