TNPSC Thervupettagam

சம்கிரா சிக்சா திட்டம்

May 27 , 2018 2248 days 656 0
  • பள்ளிக் கல்வியின் தரத்தை அதிகரிப்பதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சம்கிரா சிக்சா திட்டத்தை தொடங்கியுள்ளது.
  • இந்தத் திட்டம் பின்வரும் மூன்று திட்டங்களை ஒன்றிணைத்து தொடங்கப்பட்டது. அவையாவன,
    • அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA)
    • இராஷ்டிரிய மத்யமிக் சிக்சா அபியான் (RUSA)
    • ஆசிரியர் கல்வி (TE)
  • இத்திட்டமானது, முன்பருவக் குழந்தைக் கல்வி (Preschool) முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான பள்ளிக் கல்வியை முழுமையாக கருத்தில் கொண்டு திட்டங்களை செயல்படுத்துகிறது.
  • சம்கிரா சிக்சா திட்டமானது, முன்பருவக் குழந்தைக் கல்வி முதல் உயர்நிலைக்கல்வி வரை மாநிலங்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஆதரவினை வழங்குகிறது.
  • இத்திட்டம், முந்தைய திட்டங்களின் கூறுகளை உள்ளடக்குவதுடன் 2T என்று அழைக்கப்படும் ஆசிரியர் மற்றும் தொழில்நுட்பம் (Teacher and Technology - 2Ts) ஆகிய இரண்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. இத்திட்டம் டிஜிட்டல் முறை கல்வியின் மீது கவனம் செலுத்துகிறது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்