பள்ளிக் கல்வியின் தரத்தை அதிகரிப்பதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சம்கிரா சிக்சா திட்டத்தை தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டம் பின்வரும் மூன்று திட்டங்களை ஒன்றிணைத்து தொடங்கப்பட்டது. அவையாவன,
அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA)
இராஷ்டிரிய மத்யமிக் சிக்சா அபியான் (RUSA)
ஆசிரியர் கல்வி (TE)
இத்திட்டமானது, முன்பருவக் குழந்தைக் கல்வி (Preschool) முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான பள்ளிக் கல்வியை முழுமையாக கருத்தில் கொண்டு திட்டங்களை செயல்படுத்துகிறது.
சம்கிரா சிக்சா திட்டமானது, முன்பருவக் குழந்தைக் கல்வி முதல் உயர்நிலைக்கல்வி வரை மாநிலங்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஆதரவினை வழங்குகிறது.
இத்திட்டம், முந்தைய திட்டங்களின் கூறுகளை உள்ளடக்குவதுடன் 2T என்று அழைக்கப்படும் ஆசிரியர் மற்றும் தொழில்நுட்பம் (Teacher and Technology - 2Ts) ஆகிய இரண்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. இத்திட்டம் டிஜிட்டல் முறை கல்வியின் மீது கவனம் செலுத்துகிறது.