மோசடியின் காரணமாக பாதிக்கப்பட்ட சம்பந்த் ஃபின்செர்வ் பிரைவேட் லிமிடெட்டின் உரிமத்தினை ரத்து செய்யும் முன்னர் இந்திய ரிசர்வ் வங்கியானது காரணம் கேட்புக் குறிப்பாணையினை (Show Cause Notice) அளித்துள்ளது.
சமீபத்திய மாதங்களில் அந்நிறுவனத்தின் நிகர மதிப்பு குறைந்தபட்ச ஒழுங்குமுறைக்கு கீழே சென்றதாலும் அதன் நிதிநிலை மீட்சிநிலையை விட மோசமடைந்ததாலும் இந்த ஆணை வழங்கப்பட்டுள்ளது.
சம்பந்த் நிறுவனம் ஒரு வங்கியல்லாத நிதி நிறுவனம் மற்றும் சிறு நிதி நிறுவனமாக (NBFC – MFI) பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் நெறிமுறைகளின்படி, வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் அவற்றின் ஒட்டு மொத்த ஆபத்து நிறைந்த சொத்துக்களில் 15% என்ற அளவிற்கு குறையாது நிலை – I மற்றும் நிலை – II என்ற மூலதனங்களைக் கொண்ட குறைந்தபட்ச மூலதன நிலையைக் கடைபிடிக்க வேண்டும்.
சம்பந்த் ஃபின்செர்வ் பிரைவேட் லிமிடெட் 1992 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.