மத்தியப் பிரதேச மாநில முதல்வர், மொரேனாவில் உள்ள தேசிய சம்பல் கங்கைநீர் முதலைகள் (கரியல்) சரணாலயத்தினூடே உள்ளே சம்பல் நதியில் 10 கங்கைநீர் முதலைகளை விடுவித்தார்.
இந்த மாநிலத்தில் இந்தியாவிலேயே மிகவும் அதிக எண்ணிக்கையிலான கங்கை நீர் முதலைகள் உள்ளன என்பதோடு 2024 ஆம் ஆண்டின் ஒரு கணக்கெடுப்பின்படி இந்த சரணாலயத்தில் 2,456 முதலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கங்கை நீர் முதலைகள் என்பது நீண்ட மூக்கு கொண்ட, மீன் உண்ணும் முதலைகள் இனமான கவியாலிஸ் கேஞ்செடிகஸின் ஓர் இனமாகும்.
உலகளவில், கங்கை நீர் முதலை இனத்தின் எண்ணிக்கையில் 1997 ஆம் ஆண்டு வரை நிலையான மீட்சிப் பதிவானது ஆனால் 1997 மற்றும் 2006 ஆகிய சில ஆண்டுகளுக்கு இடையில், இந்த எண்ணிக்கை 58% குறைந்து, 436 எண்ணிக்கையிலிருந்து 182 ஆகக் குறைந்துள்ளது.
1975 மற்றும் 1982 ஆகிய சில ஆண்டுகளுக்கு இடையில், இந்தியாவில் 16 காப்பினப் பெருக்கம் மற்றும் அதன் வெளியீட்டு மையங்களும் ஐந்து கங்கை நீர் முதலைகள் சரணாலயங்களும் நிறுவப்பட்டது.
மூன்று மாநிலங்களை உள்ளடக்கிய சம்பல் சரணாலயம் ஆனது, இந்தியாவின் மிகத் தூய்மையான நதிகளில் ஒன்றான சாம்பல் நதியின் சுமார் 435 கி.மீ நீளப் பகுதிகளைப் பாதுகாக்கிறது.
IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலின்படி இது மிகவும் அருகி வரும் நிலையில் உள்ள இனமாகும்.