உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்துடன் இணைந்து [CCMB – Centre for Cellular and Molecular Biology] இந்திய தேசிய அரிசி ஆராய்ச்சி நிறுவனமானது [IIRR – Indian Institute of Rice Research] மேம்பட்ட சம்பா மசுரி [Improved Samba Masuri – ISM] எனும் நெல் ரகத்தை உருவாக்கியுள்ளது.
இந்நெல் ரகமானது பாக்டீரியாக்களால் உண்டாகும் கருகல் நோய்க்கு (Bacteria Blight) எதிர்ப்புத்தன்மை கொண்டவை.
மேலும் இந்நெல் ரகமானது குறைந்த கிளைசீமிக் குறியீட்டை [Glycemic Index] கொண்டவையாதலால், நீரிழிவு நோயாளிகளும் உண்ண ஏற்றத்தக்கது.
ISM ரகமானது 50.99 எனும் மிகக்குறைந்த GI அளவை கொண்டுள்ளது.
பொதுவாக 53 முதல் 69 அளவு வரை GI மதிப்புடைய சோதனை செய்யப்பட்ட பல்வேறு நெல் ரகங்களை காட்டிலும் ISM மிக குறைந்த அளவிலான GI ஐ கொண்டுள்ளது.
குறைந்த GI அளவுடைய உணவுப் பொருட்களின் உட்கொள்ளலானது மெதுவான குளுக்கோஸ் வெளியீட்டினை இரத்த ஓட்டத்தில் ஏற்படுத்துவதால் நீரிழிவு நோயால் உண்டாகும் பாதகங்கள் தவிர்க்கப்படும்.
உழவர்களின் வருமானத்தைப் பெருக்கிடவும், மேம்பட்ட சந்தை வாய்ப்பை பெறும் வகையிலும் இந்நெல் ரகமானது விரும்பத்தக்க அம்சங்களான நேர்த்தியான தானிய வகையாகவும், அதிக உற்பத்தியை தரவல்லனவாகவும் உள்ளது.
Glycemic Index
எத்தகு அளவில் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை பாதிக்கின்றன என்பதன் அடிப்படையில் உணவுப் பொருட்களிலுள்ள கார்போஹைட்ரேட்டுகளை ஒப்பீட்டு முறையில் தரவரிசைப்படுத்துவதே Glycemic Index ஆகும்.
55 அல்லது அதற்கு குறைவான GI அளவுடன் கூடிய கார்போஹைட்ரேட்களின் உட்கொள்ளலானது மெதுவாக செரிமானமடைந்து,உட்கிரகிக்கப்பட்டு மற்றும் வளர்சிதை மாற்றமடைந்து குறைவாகவும், மெதுவாகவும் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கும். அதனால் இன்சுலின் அளவும் மெதுவாகவே அதிகரிக்கும்.