இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையேயான கூட்டு இராணுவ பயிற்சியே சம்பிரிதி ஆகும்.
இதனுடைய 2017 ஆம் ஆண்டின் ஏழாவது பதிப்பு இந்த ஆண்டு மேகாலயாவில் தொடங்கியுள்ளது.
கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், கூட்டு கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான இணைந்து செயலாற்றும் தன்மையை மேம்படுத்துதல் போன்றவையே இக்கூட்டுப் போர் பயிற்சியின் நோக்கங்களாகும்.
இதற்கு முந்தைய 6-வது சம்பிரிதி பயிற்சி 2016 ல் தாக்காவிலுள்ள டன்கையில் எனுமிடத்திலும், 5-வது சம்பிரிதி பயிற்சி 2015ல் இந்தியாவின் மேற்கு வங்கத்தின் பின்னாகுரி எனுமிடத்திலும் நடத்தப்பட்டது.