TNPSC Thervupettagam

சம்மக்கா சாரலம்மா ஜாதரா

February 26 , 2024 304 days 302 0
  • இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, தெலுங்கானாவின் முலுகு மாவட்டத்தில் உள்ள மேடார்மில் பிரம்மாண்டமான சம்மக்கா சாரலம்மா ஜாதரா என்ற ஒரு திருவிழாவைக் கொண்டாடுவதற்காக இந்தியா முழுவதிலும் இருந்து மில்லியன் கணக்கான ஆன்மீக  பக்தர்கள் கூடுகிறார்கள்.
  • இது நான்கு நாட்கள் வரையில் நீடிக்கும் இந்தியாவின் மிகப்பெரியப் பழங்குடியினர் திருவிழாவாகும்.
  • கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இருந்து சுமார் 15 மில்லியன் பழங்குடியினர் இந்தத் திருவிழாவில் கலந்து கொள்கின்றனர்.
  • இந்தப் பழங்குடியினர் விழாவானது மகம் நட்சத்திரப் பௌர்ணமி தினத்தன்று, சம்மக்கா மற்றும் அவரது மகள் சரலம்மா ஆகியோர் தெய்வமாக போற்றப் படுகின்றனர்.
  • அவர்கள் காக்கதீய வம்சத்தின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடியதற்காகவும், தங்கள் சொந்த வாழ்க்கையைத் தியாகம் செய்து தங்கள் பழங்குடியினச் சமூகத்தையும் கலாச்சாரத்தையும் வெகுவாகப் பாதுகாத்ததற்காகவும் நினைவு கூரப் படுகிறார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்