ஹரியானா மாநில அரசானது, ‘சம்மன் சஞ்சீவனி’ எனும் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்தச் செயலியானது, 'மகிளா எவம் கிஷோரி சம்மன் யோஜனா' என்ற திட்டத்தின் கீழ் வழங்கப் படும் பலன்களின் பரவலைக் கண்காணிக்கிறது.
அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகள் மூலம் 10 முதல் 45 வயதுடைய வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு மாத விடாய்க் காலப் பயன்பாட்டுத் துணிகள் வழங்கப்படுகின்றன.
இந்தச் செயலியானது, சரியான நேரத்தில் அவற்றின் விநியோகத்தை மிகவும் நன்கு உறுதி செய்வதோடு, பயனாளிகளின் தரவைச் சேகரித்து, மாதாந்திரச் சலுகைகளைப் புதுப்பிக்கிறது.