பஞ்சாப் மாநில முதல்வர் அவர்கள் பெரோஸ்பூர் அமைக்கப்படவுள்ள சரகர்ஹி நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
சரகர்ஹி போர் ஆனது சுமார் 126 ஆண்டுகளுக்கு முன்பு 1897 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதியன்று நடைபெற்றது.
சுமார் 10 ஆயிரம் ஆப்கானி பழங்குடியினருக்கு எதிரான போரில் பிரிட்டிஷ்-இந்திய இராணுவத்தின் 36வது சீக்கியப் படைப்பிரிவைச் சேர்ந்த 21 துணிச்சல் மிக்க வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
36வது சீக்கிய படைப்பிரிவு தற்போது இந்திய இராணுவத்தின் 4வது சீக்கிய படைப் பிரிவு என அழைக்கப்படுகிறது.