சரக்கு மற்றும் சேவை வரி (GST) சபையானது, நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி தலைமையில் 10 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இழப்பீட்டு வீதவரி (தீர்வை வரி) முடிவடைந்தவுடன், வெகு ஆடம்பர, பாதகம் விளைவிக்கும் பொருட்கள் மற்றும் விற்பனை குறைக்கப்பட வேண்டிய பொருட்கள் மீதான வரி விதிப்பு குறித்து முடிவு செய்ய இந்தக் குழுவிற்கு பணிக்கப் பட்டுள்ளது.
GST வரி வரம்பில், 28% வரிக்கு மேல் ஆடம்பர, பாதகம் விளைவிக்கும் பொருட்கள் மற்றும் குறைபாடுள்ளப் பொருட்களுக்கு பல்வேறு விகிதங்களில் இழப்பீட்டு வீதவரி விதிக்கப்படுகிறது.
வீதவரி மூலம் கிடைக்கும் வருமானம் ஆனது முதலில் GST நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு அல்லது 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஐந்து ஆண்டுகளுக்கு திட்டமிடப் பட்டது.
GST அறிமுகப் படுத்தப்பட்ட பிறகு மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய இந்த வீதவரி பயன்படுத்தப்படுகிறது.
2022 ஆம் ஆண்டில், இந்த தீர்வை வரியை 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்க சபை முடிவு செய்தது.
தற்போது, GST என்பது 5, 12, 18 மற்றும் 28% ஆகிய சில அடுக்குகளைக் கொண்ட நான்கு அடுக்கு வரி அமைப்பாகும்.
GST சட்டத்தின்படி, சரக்கு மற்றும் சேவைகளுக்கு 40% வரை வரி விதிக்கப்படலாம்.