TNPSC Thervupettagam

சரக்கு மற்றும் சேவை வரி தினம் 2024 - ஜூலை 01

July 4 , 2024 15 days 61 0
  • முதன் முதலில் 2018 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதியன்று அனுசரிக்கப் பட்டது என்ற வகையில் இந்தத் தினம் சரக்கு மற்றும் சேவை வரி முறை ஏற்றுக் கொள்ளப் பட்ட முதல் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • பாராளுமன்றம் ஆனது சரக்கு மற்றும் சேவை வரியினை விதித்து வசூலிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிப்பதற்காக 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், அரசியலமைப்பு (101வது திருத்தம்) சட்டத்தினை இயற்றியது.
  • சரக்கு மற்றும் சேவை வரி என்பது, மத்திய மற்றும் மாநில அரசுகளால் விதிக்கப்படும் பல சிக்கலான வரிகளை நீக்கியதன் மூலம் இந்தியாவின் வரி கட்டமைப்பினை மாற்றியமைத்த ஒரு விரிவான மறைமுக வரியாகும்.
  • சரக்கு மற்றும் சேவை வரியானது, விதிப்பு இலக்குகளை மையமாகக் கொண்டு, வெளிப்படைத் தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்தச் செய்வதன் மூலம் வரி கட்டமைப்பை எளிதாக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்