சரக்கு மற்றும் சேவை வரி வசூலில் மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம் முதலிடங்கள்
December 25 , 2017 2555 days 912 0
சரக்கு மற்றும் சேவை வரிக்கு மாறிய காலத்தின் முதல் ஐந்து மாதங்களில் மகாராஷ்டிராவும் உத்தரப்பிரதேசமும் மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மத்தியில் முதல் இரு பங்களிப்பாளர்களாக உள்ளன.
மாநில சரக்கு மற்றும் சேவை வரி வசூலில் 18,701 கோடிகளோடு மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு 8739 கோடிகளோடு இரண்டாமிடத்திலும் அதனைத் தொடர்ந்து கர்நாடகாவும் குஜராத்தும் உள்ளன.
ஆடம்பர பொருட்களின் மீதான வரிவிதிப்பில் மகாராஷ்டிரா 3702 கோடியும், உத்தரப்பிரதேசம் 3549 கோடியும் வசூலித்தன.
சரக்கு மற்றும் சேவை வரி முறை நான்கு முக்கிய வரித்திட்டங்களான 0, 5, 12, 18 மற்றும் 28 சதவிதங்களோடு ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டன.
புகையிலை, சிகரெட்டுகள் மற்றும் ஆடம்பர கார்கள் மீது விதிக்கப்படும் உயர்ந்த வரிவிதிப்பான 28 சதவிகிதத்தோடு சேர்த்து 1 முதல் 290 சதவிகிதம் வரை செஸ் எனப்படும் வரி விதிக்கப்பட்டது.
இந்த செஸ் மூலம் வசூலிக்கப்பட்ட தொகை ஆனது ஜி.எஸ்.டி அமல்படுத்துவதன் மூலம் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட பயன்படுத்தப்படும் நிவாரண நிதியில் சேர்க்கப்படும்.