TNPSC Thervupettagam

சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் இழப்பீடு பெறும் முதல் ஐந்து மாநிலங்கள்

February 5 , 2023 530 days 309 0
  • 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான ஐந்தாண்டு கால நிலைமாற்றக் காலகட்டத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் இழப்பீடு பெறும் முதல் ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது.
  • சரக்கு மற்றும் சேவை வரியானது 2017 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதியன்று அறிமுகப் படுத்தப் பட்டது.
  • இந்தப் புதிய வரி விதிப்பு அமலாக்கத்தின் காரணமாக மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்புக்கு ஈடு செய்யப் படுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நிலை மாற்றக் காலம் 2022 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதியன்று முடிவடைந்தது.
  • 2015-16 ஆம் ஆண்டினை அடிப்படை ஆண்டாகக் கொண்ட 14% வருடாந்திர வளர்ச்சி மற்றும் உண்மையான சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ஆகியவற்றின் அடிப்படையில் கணிக்கப்பட்ட வருவாய் ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாடாக இது கணக்கிடப் படுகிறது.
  • குறிப்பிட்ட சரக்குகள் மற்றும் சேவைகள் மீதான GST இழப்பீடு கூடுதல் வரி விதிப்பதன் மூலம் மாநிலங்களுக்கான இழப்பீடு பூர்த்தி செய்யப்படுகிறது.
  • இந்த அறிக்கையில் பகிரப்பட்ட தரவுகளின்படி, தமிழ்நாடு மாநிலமானது, இந்த நிலை மாற்றக் காலகட்டத்தில் சுமார் 40,000 கோடி ரூபாய் தொகையினை இழப்பீடாகப் பெற்றுள்ளது.
  • மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகியவற்றினைத் தொடர்ந்து அதிக இழப்பீடு பெறும் நான்காவது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
  • இதில் பஞ்சாப் மாநிலம் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்