2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் வசூலானது ரூ. 1,33, 026 கோடியாக உள்ளது.
இது 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாத வசூலை விட 18% அதிகம் ஆகும்.
5வது முறையாக சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.1.30 லட்சம் கோடி என்ற ஒரு வரம்பைக் கடந்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப் பட்டதிலிருந்து முதல் முறையாக ரூ. 10,000 கோடி என்ற வரம்பினை சரக்கு மற்றும் சேவைக்கான வரியின் மீதான வரி வசூலானது கடந்துள்ளது.