இதுவரை இல்லாத வகையில் பொருளாதாரத்திற்கு மிகவும் நன்மையளிக்கக் கூடிய வகையில் மிகப்பெரிய மதிப்பிலான சரக்கு மற்றும் சேவை வரியானது மார்ச் மாதத்தில் வசூலிக்கப்பட்டது.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ஆனது, 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மொத்தம் ரூ.1,42,095 கோடியாக வசூலாகியுள்ளது.
இது 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வசூலிக்கப்பட்ட முந்தைய அதிகபட்சமான ரூ.1,40,986 கோடி என்ற ஒரு இலக்கை முறியடித்து உள்ளது.
2022 ஆம் ஆண்டு மார்ச் மாத வருவாய் கடந்த ஆண்டின் இதே மாதத்தை விட 15% அதிகமாகும்.
இது 2020 ஆம் ஆண்டு மார்ச் மாத வருவாயை விட 46% அதிகமாகும்.