மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்த இரண்டு நாட்கள் அளவிலான சரக்கு மற்றும் சேவை வரிச் சபையின் கூட்டத்தில், சில குறிப்பிட்டப் பொருட்களின் மீதான வரி வீத மாற்றங்கள் பரிந்துரைக்கப் பட்ட.
சரக்கு மற்றும் சேவை வரிச் சபையின் ஒவ்வொரு முடிவும், அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் அதிகபட்ச வாக்குகளில் நான்கில் மூன்றில் ஒரு பங்கிற்குக் குறையாத பெரும்பான்மையினரால் எடுக்கப்பட வேண்டும்.
மத்திய அரசின் வாக்கு மொத்த வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு மதிப்பு கொண்டது.
மாநில அரசுகளின் வாக்குகள் அனைத்தும் மொத்த வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு அளவிற்கு மதிப்பினைக் கொண்டிருக்கும்.