TNPSC Thervupettagam

சரக்கு மற்றும் சேவை வரிச் சபையின் 50வது கூட்டத்தின் முக்கிய அம்சங்கள்

July 16 , 2023 497 days 358 0
  • சரக்கு மற்றும் சேவை வரி சபையின் 50வது கூட்டம் புது டெல்லியில் நடைபெற்றது.
  • இக்கூட்டத்தில், சமைக்கப்படாத / பொரிக்காத சிற்றுண்டி பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தினை 5% ஆகக் குறைக்க முடிவு செய்துள்ளது.
  • தனிப்பட்டப் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மற்றும் சிறப்பு மருத்துவ நோக்கங்களுக்கான உணவு (FSMP) ஆகியவற்றிற்கு ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.
  • லின்ஸ்-டோனாவிட்ஸ் கசடுகளைச் சிறப்பான முறையில் பயன்படுத்துவதை நன்கு ஊக்குவிப்பதற்காக, லின்ஸ்-டோனாவிட்ஸ் கசடு மீதான சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் ஆனது 18 சதவீதத்திலிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • சூதாட்ட விடுதி, குதிரைப் பந்தயம் மற்றும் பல்வேறு இயங்கலை விளையாட்டுகள் ஆகியவற்றிற்கு 28% என்ற அளவில் ஒரே மாதிரியான வரி விதிக்கப் படும்.
  • இஸ்ரோ நிறுவனத்தினால் வழங்கப்படும் செயற்கைக் கோள் ஏவுதல் சேவைகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கினை நீட்டிப்பதற்கு என்று சபையானது பரிந்துரைத்து உள்ளது.
  • திரையரங்குகளில் விற்கப்படும் உணவு மற்றும் பானங்கள் ‘உணவகச் சேவை’யின் கீழ் வருவதால் அதற்கு 5% சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படும்.
  • மீன் எண்ணெய்த் தயாரிப்பில் உற்பத்தியாகும் துணை விளைபொருளுக்கான (Fish soluble paste) சரக்கு மற்றும் சேவை வரி 18 சதவீதத்திலிருந்து 5% ஆகக் குறைக்கப் பட்டது.
  • புடவை நூல்கள் /நூல் இழைகளுக்கானச் சரக்கு மற்றும் சேவை வரியானது சுமார் 12 சதவீதத்திலிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்