சரணாலய வாழ்நாள் சேவை விருது – 2020
February 18 , 2021
1255 days
666
- இயற்கையியலாளரும் ஆர்வலருமான எஸ். தியோடர் பாஸ்கரன் அவர்கள் 2020 ஆம் ஆண்டிற்கான சரணாலய வாழ்நாள் சேவை விருதை வென்றுள்ளார்.
- இந்த விருது சரணாலயம் இயற்கை அறக்கட்டளை (Sanctuary Nature Foundation) என்ற அமைப்பால் நிறுவப் பட்டது.
- வனவிலங்குப் பாதுகாப்புக்கான அர்ப்பணிப்பின் காரணமாக அவர் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப் பட்டார்.
- முன்னதாக தமிழில் இயற்கையைப் பற்றி எழுதியதற்காக அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது (இயல் விருது) வழங்கப் பட்டது.
- டொராண்டோவில் 2014 ஆம் ஆண்டில் கனடா இலக்கியத் தோட்டத்தால் இந்த விருது அவருக்கு வழங்கப் பட்டது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/18-411.jpg)
Post Views:
666