பேராசிரியர் ராம்தராஷ் மிஸ்ராவுக்கு 2021 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க சரஸ்வதி சம்மான் விருது வழங்கப்படவுள்ளது.
இது அவரது ‘மெய் டு யஹான் ஹுன்’ என்ற கவிதைத் தொகுப்பிற்காக வழங்கப் படுகிறது.
சரஸ்வதி சம்மான் விருது 1991 ஆம் ஆண்டில் KK பிர்லா அறக்கட்டளையால் நிறுவப் பட்டது.
இது இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க இலக்கிய விருதுகளில் ஒன்றாகும்.
இந்த விருதானது இந்தியக் குடிமகன் ஒருவரால் ஒரு இந்திய மொழியில் எழுதப்பட்டு கடந்த 10 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட சிறந்த இலக்கியப் படைப்பிற்கு ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகிறது.