TNPSC Thervupettagam

சரிபார்க்கப்பட்ட சுகாதார மையங்கள்

October 7 , 2024 46 days 124 0
  • கர்நாடகா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவை சுகாதார மையங்கள் பதிவேட்டில் (HFR) சரிபார்க்கப்பட்ட சுகாதார மையங்களின் ஒரு முழுமையான எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களில் உள்ள மாநிலங்களாகும்.
  • தேசிய சுகாதார வளக் களஞ்சிய (NHRR) தரவு ஆனது 2018 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • நாடு முழுவதும் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் சுகாதார நிறுவனங்களின் தகவல்களை சேகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • HFR என்பது பொது மற்றும் தனியார் சுகாதார மையங்களுக்கான தேசிய எண்ணிம சுகாதாரப் பதிவேட்டை உருவாக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்ட, சுகாதார மையங்களின் களஞ்சியமாகும்.
  • அதிநவீன மற்றும் வெகுவான பாரம்பரிய மருத்துவ முறைகளின் அடிப்படையிலான மருத்துவமனைகள், சிறிய மருத்துவமனைகள், நோயறிதல் ஆய்வகங்கள், ஆய்வு மையங்கள் மற்றும் மருந்தகங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
  • நாட்டிலேயே சுமார் 60,711 சரிபார்க்கப்பட்ட மையங்களைக் கொண்ட ஒரே மாநிலம் கர்நாடகா ஆகும்.
  • அதைத் தொடர்ந்து முறையே 81.2 சதவீதம் மற்றும் 69.1 சதவீதம் மைய நிறுவல் விகிதங்களைக் கொண்டுள்ள திரிபுரா மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன.
  • குறைந்த அளவிலான ஒரு மைய நிறுவல் விகிதத்துடன் இந்தப் பட்டியலின் கடைசி இடங்களில் ஒடிசா, தமிழ்நாடு மற்றும் டெல்லி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்