வாழ்க்கை தொடர்பான நோய்களுக்கு எதிர்ப்பு மற்றும் பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்த இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்களின் ஆணையமானது ‘சரியாக சாப்பிடுதல் இயக்கம்‘ என்னும் தேசிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. (FSSAI - Food Safety and Standards Authority of India).
FSSAI ஆனது மேலும் சரியாக சாப்பிடுதல் கருவிப் பெட்டி மற்றும் வேலை செய்யும் இடத்தில் பாதுகாப்பான மற்றும் சத்துள்ள உணவு பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளது.
இது தன்னார்வ மற்றும் கூட்டு முயற்சியாலான இயக்கமாகும். ‘ஆரோக்கியமுள்ளவற்றை சாப்பிடுதல்‘ மற்றும் ‘பாதுகாப்பாக சாப்பிடுதல்‘ எனும் இரண்டு விரிந்த தூண்களைக் கொண்டதாகும்.
இது சரியான உணவு மற்றும் உணவுசார் விருப்பங்கள் ஆகியவற்றை மக்களிடம் ஊக்கப்படுத்த தொடங்கப்பட்ட கூட்டு முயற்சியாகும்.