TNPSC Thervupettagam

சருமப் பராமரிப்பு தயாரிப்புப் பொருட்களில் நுண்நெகிழிகள்

September 5 , 2024 34 days 104 0
  • இயங்கலையிலும் கடைகளிலும் வாங்கப்பட்ட தேசிய மற்றும் சர்வதேச 45 தயாரிப்புப் பொருட்களில் நுண்நெகிழிகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தியாவில் பகுப்பாய்வு செய்யப்பட்ட அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புப் பொருட்களில் 49.12% நுண்ணிய நெகிழி துகள்கள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.
  • 45% தயாரிப்புப் பொருட்களில் பாலிஎதிலின் முதன்மையான பலபடிச் சேர்மமாகவும், பாலிப்ரோப்பிலீன், பாலிஸ்டிரீன், பாலியூரிதீன் மற்றும் பாலிகாப்ரோலாக்டோன் ஆகியவற்றுடன் ஒழுங்கற்ற அல்லது மென்மையான நுண்நெகிழிகள்  இங்கு காணப் படுகின்றன.
  • குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சில தயாரிப்புகளில் (23.33%) செல்லுலோஸ் நுண் துகள்கள் உள்ளன.
  • தோராயமாக, மொத்த தயாரிப்புகளில் 1.34% பொருட்கள் நுண் நெகிழித் துகள்களைக் கொண்டிருந்தன என்ற நிலையில் அதில் அதிகபட்சமாக 5.04 சதவீதமும், சிலவற்றில் குறைவாக 0.04 சதவீதமும் நுண் நெகிழித் துகள்கள் காணப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்