TNPSC Thervupettagam

சர்க்கரைக்கான மாற்று "சைலிட்டால்"

August 28 , 2022 823 days 360 0
  • கௌஹாத்தியில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகமானது, மீயொலியினைப் பயன்படுத்திக் கரும்புச் சக்கையில் இருந்து சைலிட்டாலை ஒரு பாதுகாப்பான முறையில் உருவாக்குவதற்காக ஒரு நொதித்தல் செயல்முறையை உருவாக்கியுள்ளது.
  • இது கரும்புச் சக்கைகளில் இருந்து பெறப்படும் ஒரு துணை உற்பத்திப் பொருள் ஆகும்.
  • இந்த அணுகுமுறையானது வேதியியல் செயல்முறையில் உள்ள செயல்முறை சார்ந்த கட்டுப்பாடுகள் மற்றும் பாரம்பரிய நொதித்தல் செயல்முறையில் உள்ள கால தாமதங்களை நிவர்த்தி செய்கிறது.
  • நொதித்தல் செயல்முறையின் போது மீயொலியினைப் பயன்படுத்துவது என்பது நொதித்தலுக்கான நேரத்தை 15 மணி நேரமாகக் குறைத்தது.
  • இது உற்பத்தி அளவினைக் கிட்டத்தட்ட 20% அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்