TNPSC Thervupettagam

சர்த் ஹவா நடவடிக்கை 2025

January 28 , 2025 26 days 133 0
  • எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) ஆனது, ஜெய்சால்மரில் பாகிஸ்தாந நாட்டுடனான எல்லைப் பகுதியில் ஊடுருவல் முயற்சிகளைத் தடுப்பதற்காக என்று கண்காணிப்பை அதிகரித்துள்ளது.
  • குளிர்காலத்தில் மூடுபனியால் ஏற்படும் குறைவான புலப்படும் தன்மை காரணமாக நிகழும் ஊடுருவல் முயற்சிகளைத் தடுப்பதே இந்தச் சிறப்புப் பயிற்சியின் நோக்கம் ஆகும்.
  • வழக்கமாக, BSF ஆனது கோடையில் 'கரம் ஹவா நடவடிக்கை' மற்றும் குளிர்காலத்தில் 'சர்த் ஹவா நடவடிக்கை' ஆகியவற்றை நடத்துகிறது.
  • மறுபுறம், BSF ஆனது இந்திய-வங்காளதேச எல்லையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப் பட்ட இருமல் நிவாரணி மருந்துகள் அடங்கிய மூன்று நிலத்தடி இரும்புப் பதுங்கு குழிகளைக் கண்டுபிடித்துள்ளது.
  • இந்தப் பதுங்கு குழிக்குள் சுமார் 1.41 கோடி ரூபாய் மதிப்புள்ள 62,200 குடுவைகள் பென்செடைல் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
  • கோடீனை அடிப்படையாகக் கொண்ட இருமல் நிவாரணி மருந்தான பென்செடைல், வங்காள தேசத்தில் தடை செய்யப்பட்டுள்ளது, ஆனால் அங்குள்ள மிக அதிகத் தேவை காரணமாக பெரும்பாலும் அது இந்தியாவிலிருந்து கடத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்