தமிழக முதல்வர் மார்ச் 4 ஆம் தேதியன்று சர்பங்கா நீரேற்றப் பாசனத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்தத் திட்டமானது நீரேற்றப் பாசன நுட்பத்தின் மூலம் மேட்டூர் அணையில் இருந்து உபரி வெள்ளநீரை சேலத்தில் உள்ள சரபங்கா நதிக்குத் திருப்பிவிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர் மற்றும் ஓமலூரில் உள்ள 100க்கும் மேற்பட்ட நீர்த் தொட்டிகள் இந்த நடவடிக்கையின் மூலம் பயனடைகின்றன.
இது அந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்த உதவுகின்றது.