மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2 அன்று உலகம் முழுவதும் சர்வதேச அகிம்சை தினம் அனுசரிக்கப்படுகிறது.
இத்தினம் கல்வி மற்றும் பொது விழிப்புணர்வு மூலம் அகிம்சைக்கான கொள்கைகளை ஊக்கப்படுத்த விழைகிறது. ஐ.நா-வில் உறுப்பினராக உள்ள அனைத்து நாடுகளும் இத்தினத்தை அனுசரிக்கின்றன.
இந்தியாவில் இத்தினம் காந்தி ஜெயந்தி தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினமாகும்.
2007 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம் ஐ.நா. பொதுச் சபையால் இத்தினம் ஏற்படுத்தப்பட்டது.