2007 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது காந்தி அவர்களின் கொள்கைகளுக்கு மரியாதை அளிக்கும் வகையில் இந்த நாளினை நியமித்தது.
இந்த நாள் "கல்வி மற்றும் பொது விழிப்புணர்வு மூலம் அகிம்சை செய்தியை பரப்பச் செய்வதற்கான" ஒரு நிகழ்வாகும்.
இது "உலகளவில் பொருந்தும் அகிம்சை கொள்கை" மற்றும் "அமைதி, சகிப்புத்தன்மை, புரிதல் மற்றும் அகிம்சை ஆகியவற்றின் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கான" அதன் விருப்பத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 02 ஆம் தேதி குஜராத்தின் போர்பந்தர் எனுமிடத்தில் பிறந்தார்.
1930 ஆம் ஆண்டில், காந்தி அவர்கள் டைம் இதழால் ஆண்டின் சிறந்த நபராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.