இந்தத் தினமானது M.K. காந்தி அவர்களின் பிறந்தநாளில் அனுசரிக்கப் படுகிறது என்பதோடு மேலும் சமூக மற்றும் அரசியல் மாற்றத்திற்கான ஒரு வழிமுறையாக அகிம்சையின் மீதான அவரது தத்துவம் மற்றும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
அவரது போராட்டங்கள் ஆனது அகிம்சை மற்றும் ஆயுதமற்ற முறையில் வழி நடத்தப் பட்டன.
அகிம்சை முறையிலான ஒரு எதிர்ப்புக் கொள்கையானது சமூக அல்லது அரசியல் மாற்றத்தை அடைவதற்காக வேண்டி நேரடியான வன்முறையைப் பயன்படுத்துவதை நிராகரிக்கிறது.
2007 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை இந்த நாளை ஒரு மனதாக அறிவித்தது.