முதலாவது சர்வதேச அமைதி தினம் ஆனது 1982 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டது.
இது அமைதி மற்றும் மோதல் தீர்வுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உறுதிப்பாட்டை நினைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் மிகவும் அமைதியான மற்றும் நேர்மையான உலகத்தை உருவாக்குவதை நோக்கிப் பணியாற்றுவதற்கு தனி நபர்கள், சமூகங்கள் மற்றும் நாடுகளை ஊக்குவிக்கிறது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘அமைதிக்கான நடவடிக்கைகள்: # உலகளாவிய இலக்குகளுக்கான நமது லட்சியம்’ என்பதாகும்.
2023 ஆம் ஆண்டானது மனித உரிமைகளுக்கான உலகளாவியப் பிரகடனம் மற்றும் இனப் படுகொலை தடுப்பு மற்றும் தண்டனை தொடர்பான உடன்படிக்கையின் 75வது ஆண்டு நிறைவு விழாவாகும்.