சமூகத்தின் வளர்ச்சிக்கு அருங்காட்சியகம் எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலகம் முழுவதும் சர்வதேச அருங்காட்சியக தினம் மே 18 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
2018 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு: “அருங்காட்சியகங்கள் மற்றும் உயர் தொலைத் தொடர்பு: புதிய அணுமுறைகள் மற்றும் புதிய மக்கள்”.
அருங்காட்சியகங்களின் சர்வதேச சங்கத்தால் இத்தினம் 1977 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
அருங்காட்சியகங்களின் சர்வதேச சங்கமானது 1946 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் பிரான்ஸ் நாட்டின் பாரீசில் அமைந்துள்ளது.